பிரக்யான் நிறைவு விழா
திருச்சி: மூன்று நாட்களாக திருச்சி என்.ஐ.டி-ல் நடைபெற்று வந்த பிரக்யான் 25 தொழில்நுட்ப கலாச்சார விழா நிறைவடைந்தது.மூன்றாம் நாள் நிகழ்வில் பணிமனைகள், திரை உலக தொழில்நுட்ப வல்லுநரின் சிறப்பு உரை, விவாதங்கள், வாலேடிக்ஷன் விழா ஆகியவை நடந்தன. மேலும் அனலாக் டிவைசஸ், யோய் ரோபோடிக்ஸ், லினக்ஸ் பவுண்டேஷன், தௌலத் போன்ற நிறுவனங்களின் பயிற்சி பணிமனைகள் நடந்தன. தொடர்ச்சியாக வாட்டர் ராக்கெட்ரி, பசில் சாம்ப், ரோபோவார்ஸ், பிரண்ட்லி ப்யூட் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன.விழாவின் நிறைவாக மைசூர் எக்ஸ்பிரஸ் மற்றும் அந்தாரா மித்ரா ஆகியோரின் இரண்டு புரோஷோஸ் பார்வையாளர்களை கவர்ந்தன.