உள்ளூர் செய்திகள்

மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு

சென்னை: 2025 மே மாதம் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான மீள் மறுகூட்டல்/மறுமதிப்பீடு முடிவுகள் வரும் திங்கள் அன்று (ஜூன் 23) வெளியாக உள்ளது.மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ள தேர்வுகளின் விவரங்கள் மட்டுமே www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெறும். மாற்றம் இல்லாத மாணவர்களுக்கு தனிப்பட்ட தகவல் அனுப்பப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்றிய மதிப்பெண்கள் உள்ள தேர்வுகளுக்கான தகவல்களைப் பெற்ற பின், மாணவர்கள் மதிப்பெண் விவரத்தாள்-ஐ தங்களது பள்ளி மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்