உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் சங்கம் வரவேற்பு

சென்னை: தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டு உள்ளதாக, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் செல்லையா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் பயிற்று மொழியாக கடைபிடிக்கப்படும், பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து, மாணவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, படைப்பாற்றல் திறனை வளர்த்தல், மனப்பாட பகுதிக்கு பதிலாக, பாடங்களின் கருத்துகளை புரிந்துக் கொள்ளுதல் என, மாணவர்கள் நலன், ஆசிரியர்கள் நலன் கருதி, மாநில கல்வி கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட கல்வி கொள்கையை, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்