முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கம்பம்: கம்பம் எம்.பி.எம்., மேல் நிலைப் பள்ளியில் 1998 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மகுட காந்தன் தலைமை வகித்தார். நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் காந்த வாசன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 27 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்றனர். பள்ளி நாட்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியல் தங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களை கவுரவித்தனர்.நிகழ்வில் மறைந்த முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பலர் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆசிரியர் சோமநாதன் நன்றி கூறினார்.