உள்ளூர் செய்திகள்

கல்வித்துறையில் அதிகாரிகள் நியமனம்

சென்னை: பள்ளி மாணவ, மாணவியருக்காக, பள்ளிக்கல்வித்துறை சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அவற்றை கண்காணித்து, நெறிப்படுத்த, பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்டவற்றின் இயக்குனர், இணை, துணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், செயல்படுத்தப்படும் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை கண்காணித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகள், ஆசிரியர்களின் நலன் சார்ந்த நீதிமன்ற வழக்குகள், ஆகியவை குறித்தும் ஆய்வு செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்