உள்ளூர் செய்திகள்

பட்டயத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திண்டுக்கல்: பயிற்சி, தனித்தேர்வர் பட்டயத்தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திகுறிப்பு: திண்டுக்கல்லில் பயிற்சி, தனித்தேர்வர்களுக்கான துவக்கக் கல்வி பட்டயத்தேர்வு மே 18ல் துவங்குகிறது. இதற்கு தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதிய அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர், பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் மார்ச் 26 மதியம் முதல் ஏப்., 3 வரை விண்ணப்பிக்கலாம்.கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, முதலாமாண்டு மதிப்பெண் சான்றிதழ் ரூ.100, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் ரூ.100, பதிவு, சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் தத்கல் திட்டத்தில் ஏப்., 6, 7ல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணமாக கூடுதலாக ரூ.1000 செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்