வேலை வாய்ப்பு கருத்தரங்கு
மதுரை: மத்திய, மாநில அரசின் உதவியுடன் உதவி நர்சிங் பயிற்சி பெற்ற 120 பேருக்கு மதுரை பெட்கிராட் சார்பில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி முன்னிலை வகித்தனர். நர்சிங் ஸ்டேஷன் கம்பெனி நிர்வாக இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் குத்துவிளக்கேற்றினார். இயக்குனர் பென்னி சேவியர் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சியாளர்கள் கீர்த்தி ராஜ், கவுசல்யா, பவித்ரா, ரஞ்சித் ஏற்பாடுகளைச் செய்தனர்.