அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்
விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், பொருளியல் துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் பொருளியல் மன்ற விழா நடந்தது.'நவீன பொருளாதார வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு' தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார்.அண்ணாமலை பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் குமரகுரு, பேராசிரியர்கள் சரவணன், கலைச்செல்வி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.