உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரோட்டரி கிளப், புனித மரியன்னை பள்ளி இன்ட்ராக்ட் கிளப் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. ரோட்டரி சங்கத்தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.செயலாளர் ரங்கையா வரவேற்றார். ரோட்டரி துணை ஆளுநர் சண்முகம், பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன்லுார்து பிரகாசம், சென்னை பல்கலை குற்றவியல்துறை துணைத்தலைவர் பிரியம்வதா, தொழில் வழிகாட்டி நிபுணர் கருப்பண்ணசுவாமி பேசினர். பேராசிரியர் மில்டன் பவர்ஸ், சிவா பிளஸ் 2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்