உள்ளூர் செய்திகள்

தேசிய கராத்தே போட்டி

மதுரை: கொடைக்கானலில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கட்டா, சண்டை பிரிவில் கலந்து கொண்டனர்.இதில் திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளி மாணவர்கள் கட்டா பிரிவில் வெற்றி பெற்றனர். திலக்தரன், ஹரிஷ், நவீன் குமார் முதல் பரிசு பெற்றனர். தாரிகா, லிதர்சனா ஸ்ரீ, சிவசரவணன், அஸ்வந்த், சாம்சன், ஆரூண் ராஜா 2ம் பரிசும், கெனிஷா 3ம் பரிசும் பெற்றனர். தலைமை பயிற்சியாளர் பி. ராஜா, தொழில்நுட்ப இயக் குனர் வைரமணி, ஒருங்கிணைப்பாளர் டி. ராஜா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்