உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு கோடை கொண்டாட்டம்

மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் நேற்று தொடங்கியது.இங்கு குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க, ஆண்டுதோறும் கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.முதல் நாளான நேற்று, மன அமைதி தரும் இசை என்ற தலைப்பில் இசைநிகழ்ச்சி நடந்தது. கல்வி சர்வதேச பள்ளியின் இசை நிபுணர் ஷாஜஹான் குழந்தைகளை பாட வைத்தும், எளிய உடல் அசைவுகள் மூலம் உற்சாகப்படுத்தியும், எளிய பாடல்களைப் பாடச் செய்தார். பின்னர் அபாகஸ் அடிப்படை பயிற்சியில் குழந்தைகள் சிக்கலான கணிதங்களை எளிதில் தீர்வு காண்பது குறித்து ராஜகோகிலா பயிற்சியளித்தார். குழந்தைகளுக்கு திரைக்கதை நிபுணர் ஆண்டனி திரைக் கதையின் அடிப்படை கூறுகள், அமைப்புகள் குறித்து விளக்கினார்.இந் நிகழ்ச்சிகள் மே 31 வரை நடக்கவுள்ளது. காலை 11:00 முதல் மதியம் 01:00 மணி வரையான நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். இன்று (மே 7) முத்துலட்சுமண ராவ் குழுவினரின் தோற்பாவை கூத்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்