உள்ளூர் செய்திகள்

சங்கரா கல்லுாரியில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ‛இந்திய தரிசனங்கள்' ‛உபநிஷத்துகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடந்தன. காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் சமஸ்கிருதம், தமிழ் துறைகள் சார்பில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 92வது ஜெயந்தி விழாவையொட்டி, ‛பாரதிய சாஸ்திர சாகரம்' என்ற தலைப்பில் நேற்று நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார்.இதில், திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலை பேராசிரியர் சக்கரவர்த்தி ராகவன், ‛இந்தியத் தரிசனங்கள்' என்ற தலைப்பிலும், சென்னை அமிர்த விஸ்வ வித்யாபீடம் முனைவர் எஸ். தியாகராஜன், ‛உபநிஷத்துகள்' என்ற தலைப்பிலும் கருத்தரங்க உரையாற்றினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சமஸ்கிருத துறை தலைவர் ஸ்ரீசைலம் தமிழ் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்