தொடர் மருத்துவ கருத்தரங்கு
புதுச்சேரி: புதுச்சேரி, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் உலக மனநல தினத்தையொட்டி மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவக் கருத்தரங்கு நடந்தது.மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கி, கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஜிப்மர் மருத்துவமனையின் மனநல மருத்துவர் ரவி பிலிப் ராஜ்குமார் பங்கேற்று, மனநல பாதிப்பு எவ்வாறு உடல் நல பாதிப்பாக வெளிப்படுகிறது என விளக்கம் அளித்தார்.கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி பிரதாப் வசிகர், குறைதீர் அதிகாரி ரவி, மனநல மருத்துவர் பொன்மணி பாலன் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.மருத்துவ கருத்தரங்கில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.