உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...

இதனால் மட்டுமே மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுவிட முடியாது. எத்தனை மணி நேரம் புத்தகத்தை வைத்து படிக்கிறீர்கள் என்பதை விட எந்தளவிற்கு பாடங்களை படித்துள்ளீர்கள் என்பதே முக்கியம். அவ்வாறு படிப்பதை புரிந்து படிப்பது மிகவும் அவசியம். சில மாணவர்கள் பள்ளியில் படிக்காதவற்றை டியூசனில் படித்துக்கொள்ளலாம் என்று நினைத்து அசட்டையாக இருந்துவிடுகிறார்கள். இறுதியில் அவர்கள் இரண்டு இடங்களிலும் படிக்காமல் கவனக்குறைவாக இருந்துவிடுகின்றனர். கவனக்குறைவினாலேயே பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் தோல்வியடைவதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் தாங்கள் எவ்வளவு மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட எவ்வளவு படித்துள்ளோம் என்பதில் கவனம் செலுத்துவதோடு, எந்த பாடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு ஆசிரியருடைய வழிகாட்டுதல் மிகவும் அவசியம். பெற்றோர்கள் மாணவர்களை டியூசனுக்கு அனுப்பிவிட்டால் நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும். அவ்வப்போது அவர்களுடைய வகுப்பு ஆசிரியர்களை சந்தித்து அவர்களது உண்மை நிலையை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எப்பொழுதும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்தைகளை கூறி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதிகமான கண்டிப்பை தவிர்த்து அன்பாக பேசி புரிய வைப்பது நல்லது. ஒரு சில மாணவர்கள் அரையாண்டு தேர்வு வரை நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருப்பார்கள். கடைசி நேரத்தில் தேவையற்ற பதட்டத்தினால் எதிர்பார்த்த அளவு மதிப்பெண்களை பெற முடியாமல் போவார்கள். இதற்கு மாணவர்களுக்கு ஏற்படும் அதிகப்படியான மனச்சோர்வும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இவற்றை கண்டறிந்து களைய வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை. பெற்றோர்களின் ஆதரவான வார்த்தைகளே மாணவர்களுக்கு மனச்சோர்வை நீக்கி புத்துணர்வை அளிக்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களது அணுகுமுறை இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்