என்.டி.பி.சி.,யில் மேனேஜ்மென்ட் காலியிடங்கள்
இந்தியாவின் எரிசக்தித் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் என்ற என்.டி.பி.சி., நிறுவனம்இந்தியாவின் எரிசக்தித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகின் முதல் 2000 நிறுவனங்களில் 319 ஆவது நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் இந்த நிறுவனத்திற்கு உண்டு. என்.டி.பி.சி., நிறுவனத்தில் இன்ஜினியரிங் மற்றும் நிதிப் பிரிவுகளில் மேனேஜ்மென்ட் டிரெய்னிக்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புஇன்ஜினியரிங் பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், நிதிப் பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதிஎன்.டி.பி.சி.,யின் இன்ஜினியரிங் பிரிவில் எலக்ட்ரிகல், மெக்கானிகல், சிவில், கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய 4 உட்பிரிவுகள் உள்ளன. இந்தப் பிரிவுகளில் மொத்தம் 480 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய துறையில் இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி பிரிவில் பட்டப்படிப்போ அல்லது ஏ.எம்.ஐ.இ., படிப்பில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியோ தேவைப்படும். கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பிரிவுக்கு எலக்ட்ரானிக்ஸ், இ அண்டு டி, இ அண்டு பி, பவர் எலக்ட்ரானிக்ஸ், இ அண்டு சி, இ.இ.ஐ., இன்ஸ்ட்ரூமெண்டேஷன் அண்டு கன்ட்ரோல் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிதிப் பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க சி.ஏ., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ., முடித்தவர்களும், வரும் 01.08.2011க்குள் முடிக்கக் கூடியவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி எப்படிநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனின் மேனேஜ்மென்ட் டிரெய்னி இடங்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் என்ற அடிப்படையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி என்.டி.பி.சி.,யின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.500/ பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரி வினருக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. இதனை புது டில்லி சி.ஏ.ஜி., ஸ்டேட் வங்கிக் கிளையின் 30987919993 அக்கவுண்ட் எண்ணிற்கு ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். இதன் பின் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை தேவையான இணைப்புகளுடன் பின் வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும். முகவரிET Recruitment Group,NTPC Limited,Post Box No: 004,Head Post Office, Lodhi road,New Delhi - 110003. முக்கிய தேதிகள்ஆன்லைனில் பதிய இறுதி நாள்: 07.03.2011பிரிண்ட் அவுட்டுகள் சென்றடைய இறுதி நாள்: 12.03.2011அகில இந்திய தேர்வு நாள்: 17.04.2011இணையதள முகவரி: www.ntpc.co.in