உள்ளூர் செய்திகள்

துணைவேந்தர்களின் வெளிநாட்டு பயணம்

இந்திய பல்கலைக்கழகங்களை சேர்ந்த 25 துணைவேந்தர்கள், மே மாதம் கனடா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்திய  கனடா கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காக இவர்கள் செல்கின்றனர். இம்மாநாடு வரும் மே 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையில் கல்வித்துறையில் புதிய வளர்ச்சி மற்றும் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் என மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு ஜூன் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கின், கனடா பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் இருநாடுகள் சார்பில் கல்வி மாநாடு நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து இம்மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் போது ஆசிரியர்கள்  மாணவர்கள் பரிமாற்றம், தொலைநிலைக் கல்வி, பப்ளிக் பிரைவேட் பாட்னர்ஷிப், ஜாய்ன்ட் டிகிரி, பிஎச்டி., படிப்புகள் உள்ளிட்ட விஷயங்களில் இருதரப்பு குழுவினரும் ஆலோசனை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்