உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வர்ணனையாளராக விருப்பமா

கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது நேரடியாக வர்ணனை செய்வதே வர்ணனையாளர்களின் பணி. இவர்கள் ஆங்கிலத்தில் "கமன்டேட்டர்&' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் விளையாட்டு போட்டியை பார்ப்பவர்கள் அல்லது கேட்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் பேச வேண்டும். தேவையான தகுதிகள்:  விளையாட்டு துறையில் ஆர்வமுள்ளவராக இருப்பது அடிப்படை தகுதி. குறிப்பிட்ட விளையாட்டு தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆங்கிலப்புலமையுடன் நல்ல குரல் வளம் இருக்க வேண்டியது அவசியம். ஆளுமை திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். நேரடி ஒளிபரப்பில் பேசுவதால் நகைச்சுவை உணர்வுடன்சுவாரஸ்யமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு: இவர்கள் நாளொன்றுக்கு 5000 முதல் 25,000 ரூபாய் வரை ஊதியமாக பெற முடியும். இந்த துறையை பொறுத்தளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் மட்டுமே பணிபுரிய வேண்டியிருக்கும். அதற்கேற்ப உங்கள் மாத வருமானம் இருக்கும். வேறு பணிகளை செய்பவர்களும் பகுதி நேர வேலையாக இதனை பார்க்க முடியும். வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்களில் இவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது பல்வேறு இணையதளங்கள் வார்த்தை வடிவில் வர்ணனையை போடிகள் நடைபெறும் போது உடனுக்குடன் வழங்கி வருகின்றன. இதுபோன்ற இணையதள நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளது. இந்த துறையில், மீடியா தொடர்பான படிப்புகளை படித்தவர்கள் எளிதாக ஜொலிக்க முடியும். இதற்கென பிரத்யேக படிப்புகள் இல்லை. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்புகள் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்