கல்விமலர்.காம் வழங்கும் ரொக்கப்பரிசு
தினமலர் குழுமத்தில், கடந்த 2008ம் ஆண்டு, கல்விமலர்.காம் துவக்கப்பட்டது. கல்வி தொடர்பான செய்திகளுக்காக தமிழில் துவக்கப்பட்ட முதல் வெப்சைட், கல்விமலர்.காம் என்பது இதன் சிறப்பம்சம். ஆங்கிலத்திலும் கல்விமலர்.காம் தகவல்களை வழங்குகிறது. மாணவர்களுக்கு, தேவையான அனைத்து தகவல்களும், இலவசமாகவே வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களின் அமைவிடம், அவற்றின் உள்கட்டமைப்பு வசதி, பாடப்பிரிவுகள், கல்வி தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் வெளியீடுகள், உதவித்தொகை, வேலைவாய்ப்பு, தேர்வு அறிவிப்புகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பற்றிய தகவல்கள் 24 மணி நேரமும் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், தங்களது மதிப்பெண்களை www.dinamalar.com, www.kalvimalar.com இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவு வெளியானதும், இந்த இணைய தளங்களில் பதிவு எண்ணைப் பதிவு செய்தால், மதிப்பெண்களை உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். கல்விமலர்.காமில், பதிவு செய்தவர்களில் அதிக மதிப்பெண் பெறும் முதல் மூன்று பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவிக்கிறது.