உள்ளூர் செய்திகள்

நெட் தேர்வு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த, நெட் தேர்வை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் உள்ள பல்கலை, அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணி புரிய, தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி (நெட்) தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதற்கான தேர்வு, சென்னையில், எத்திராஜ் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உட்பட ஏழு இடங்களில் நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மொத்தம் 10 ஆயிரத்து 695 பேர் இத்தேர்வை எழுதினர். விருப்பப்பாடம், பொது அறிவு உட்பட, காலையில் இரண்டு தேர்வுகளும், மதியம் ஒரு தேர்வு என மொத்தம் மூன்று தேர்வுகளை மாணவர்கள் எழுதினர். கோவையில் 5 மையங்களில் நெட் தேர்வு நடந்தது. கோவை மண்டலத்தில் மொத்தம் 5,291 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்