உள்ளூர் செய்திகள்

பொது இடங்களில் 100 சிறிய நுாலகங்கள்

சென்னை: பொது மக்கள் அதிகம் கூடும், 100 இடங்களில், 3 கோடி ரூபாய் மதிப்பில் சிறிய நுாலகங்கள் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:தமிழகத்தில், 521 ஆதிதிராவிடர் மற்றும் 15 பழங்குடியினர் விடுதிகள் கண்டறியப்பட்டு, வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன்பாக, 100 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்காக ஏற்படுத்தப்பட்ட தொழிற்பேட்டைகளில், 50 கோடி ரூபாய் மதிப்பில், நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்மாவட்ட அரசு மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் 100 இடங்களில், அவர்கள் காத்திருக்கும் நேரத்தை முறையாக பயன்படுத்த, 3 கோடி ரூபாய் செலவில் சிறு நுாலகங்கள் அமைக்கப்படும்மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு இல்லாத நிலையில், தற்போது இழப்பீடாக, 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. உயிரிழப்பு ஏற்பட்டால், 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.இத்தொகை, 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, உயிரிழப்பு இல்லாத விபத்துகளுக்கு, ஒன்றரை லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையும், உயிரிழப்பு ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய் வரையும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்