வக்கீல் தேர்வில் 12 பேர் வெற்றி
சென்னை: பார் கவுன்சில் மற்றும் மனிதநேயம் கட்டணம் இல்லா கல்வியகம் நடத்திய பயிற்சி வகுப்பில் பயின்று அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்ற 12 பேர் பணியில் சேர்ந்தனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேயம் கட்டணம் இல்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகம் ஆகியவை இணைந்து, அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் பதவிக்கு, முதன்மை தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்பை, சிறந்த சட்ட வல்லுனர்களை கொண்டு நடத்தின. இத்துடன், நேர்முகத் தேர்விற்கான சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது.இதில் படித்த 12 வழக்கறிஞர்கள், அந்த தேர்வில் வெற்றி பெற்று, சமீபத்தில் பணியில் சேர்ந்தனர். இதில், மாநில அளவில் தர வரிசை பட்டியலில், உமாதேவி முதலிடம் பிடித்தார். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் மனிதநேயம் கட்டணம் இல்லா ஐ.ஏ.எஸ்., நிறுவன தலைவர் சைதை துரைசாமியும் வாழ்த்து தெரிவித்தனர்.