உள்ளூர் செய்திகள்

சி.இ.ஓ., அலுவலகத்தில் ரூ.13 ஆயிரம் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.13 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.நேற்று இரவு 10:00 மணிக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத பணம் ரூ.13 ஆயிரம் வைத்திருந்தது கண்டறிந்தனர்.ஆசிரியர் இடமாறுதலுக்காக பணம் பெறப்பட்டதா என போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். முதன்மை கல்வி அலுவலர் ராமனை ஆசிரியர் நிர்வாக குழு உறுப்பினராக பணியிட மாற்றம் செய்து நேற்று அறிவிப்பு வந்துள்ளது. இந்நிலையில் ரெய்டு நடந்துள்ளது. ராமன், நேர்முக உதவியாளர் திருச்செல்வராஜா, அலுவலக உதவியாளர் சாணக்கியன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்