ஐகேட்டில் புதிதாக 1500 பேருக்கு பணி வாய்ப்பு
புகழ் பெற்ற ஐகேட் என்னும் பன்னாட்டு ஐ.டி., நிறுவனம் பெங்களூருவில் அது தொடங்கவுள்ள உலகளாவிய மையத்திற்காக புதிதாக 1500 பேரை பணிக்கு எடுத்துக் கொள்ளவிருக்கிறது. ரூ.65 கோடி செலவில் இந்த மையம் அமைக்கப்படுகிறது. 2010ம் ஆண்டில் 1500 பேரும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவர் என்று நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது 3500 பேரை பணியில் கொண்டுள்ள இந்த நிறுவனம் இந்தியா தவிர மெக்சிகோ மற்றும் ஆஸ்திரேலியாவிலும் தனது மையங்களைக் கொண்டுள்ளது.