உள்ளூர் செய்திகள்

பி.எட்., சேர செப்.,16 முதல் விண்ணப்பம்

சென்னை: பி.எட்., படிப்பில்சேர செப்., 16 முதல் 26வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டியில், பொறியியல் கல்லுாரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை செப்.,23 வரை நடக்கும். பி.எட்., படிப்பில் சேர www.tngasa.in ஆன்லைனில் 16 முதல் 26 வரை விண்ணப்பிக்கலாம். தர வரிசை, செப்., 30ல் வெளியாகும். மாணவர் சேர்க்கை அக்., 14ல் துவங்கி 19ல் நிறைவடையும். முதல் ஆண்டு வகுப்பு அக்., 23ல் துவங்கும். அரசு கல்லுாரி, உதவி பெறும் கல்லுாரிகளில் 2,040 பி.எட்., இடங்கள் உள்ளன என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்