உள்ளூர் செய்திகள்

பொதுப் பாடத்திட்டம்: அக்.18ல் துணைவேந்தர்கள் கூட்டம்

தமிழ்நாடு மாநில உயர்கல்விக் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டத்திற்கு கல்வி அமைச்சர் பொன்முடி தலைமை வகிப்பார். தமிழகப் பல்கலைக்கழகங்கள் பொதுவான பாடத்திட்டத்தைப் பின்பற்றும்போது, ஒரு மாணவர் தனது குடும்பத்துடன் ஒரு நகரத்திலிருந்து வேறு ஒரு நகரத்திற்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டால், படிப்பில் தடை ஏதும் இல்லாமல் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க பொதுப் பாடத்திட்டம் ஏதுவாக இருக்கும். பொதுப் பாடத்திட்டத்தைக் கொண்டு வருவதால் எழும் பிரச்சினைகள், தொகுப்புக் கல்லூரிகள் திட்டம், தங்களது விருப்பப்படி பாடங்களைத் தேர்வு செய்து படித்தல் (சாய்ஸ் பேஸ்ட் கிரெடிட் சிஸ்டம்) போன்ற பல்வேறு அம்சங்கள் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற உயர்கல்விக் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. தற்போது அக்.18ம் தேதி நடைபெறும் துணைவேந்தர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பொதுவான பாடத்திட்டத்தைப் பின்பற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்