உள்ளூர் செய்திகள்

கூகுளில் 20 ஆண்டுகள் நிறைவு; சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி

புதுடில்லி: கூகுள் நிறுவனத்தில், 20 ஆண்டுகள் நிறைவு செய்தது குறித்து, சுந்தர் பிச்சை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை, கடந்த 2004ம் ஆண்டில், கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது இந்நிறுவனத்தில் அவர் இணைந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுகுறித்து, சுந்தர் பிச்சை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:ஏப்ரல் 26, 2004ல், கூகுள் நிறுவனத்தில், என் பணியை துவங்கினேன். இந்த 2 ஆண்டுகளில், தொழில்நுட்பம், கூகுள் தயாரிப்புகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, என் தலைமுடி உட்பட பல்வேறு அம்சங்கள், மாற்றம் கண்டுள்ளன. ஆனால், இன்னும் மாறாமல் இருக்கும் ஒன்று, என் உற்சாகம் மட்டும் தான்.கூகுள் நிறுவனத்தில் பணிபுரிவதில், மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்