தனித்தேர்வர்களுக்கு வரும் 20ல் அறிவியல் செய்முறை தேர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வரும் 20ம் தேதி நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் செய்முறை தேர்வில் தனித்தேர்வர்கள் பங்கேற்க வேண்டும், என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது: கடந்த மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி அறிவியல் பாட செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் அறிவியல் பாட பயிற்சி வகுப்பு 80 சதவீம் வருகை புரிந்து ஆனால், செய்முறை தேர்வில் பங்கேற்க தவறிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் வரும் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய இருநாட்கள் நடைபெறும் செய்முறை தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம். மேலும், தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு இது குறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப்படமாட்டாது. இவ்வாறு, கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறினர்.