உள்ளூர் செய்திகள்

பெங்களூரில் ஜன., 21 - 25ல் உலோக பார்மிங் கண்காட்சி

சென்னை: இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர் சங்கம், 'உலோக பார்மிங் 2026-' கண்காட்சியை வரும் ஜனவரி 21 - 25ம் தேதிவரை பெங்களூரில் நடத்துகிறது.இதுகுறித்து அவ்வமைப்பு கூறியுள்ளதாவது:உலோக பார்மிங் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், டிஜிட்டல் உருமாற்றம், உயர் உற்பத்தி தீர்வுகள், தொழில்நுட்பங்களைப் பகிரும் இக்கண்காட்சி, பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெறும்.மொத்தம் 46,000 ச.மீ., பரப்பில் நான்கு அரங்குகளில், 20 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ளும்.இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் பங்கெடுக்கும். வாகன உதிரி பாகங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள், மின்சாரம், ரயில்வே, கட்டுமான உபகரணங்கள், பொது மற்றும் கனரக பொறியியல், மூலதனப் பொருட்கள், மின்னியல், மின்னணுவியல் முதலிய பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்வர். இது, ஆசிய அளவில் மிகப்பெரிய உலோக பார்மிங் மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப கண்காட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்