உள்ளூர் செய்திகள்

கலந்தாய்வு நிறைவு 237 இடங்கள் காலி

சென்னை: டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்தது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள், தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு, டிப்ளமோ நர்சிங் படிப்பு உள்ளது. 2,000 இடங்களுக்கு, 9,400 பேர் விண்ணப்பித்தனர். சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், மூன்று நாட்களாக நடந்த கலந்தாய்வு, நேற்றுடன் நிறைவடைந்தது. 1,763 இடங்கள் நிரம்பின; மீதம், 237 இடங்கள் காலியாக உள்ளன. 2ம் கட்ட கலந்தாய்வு குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்