உள்ளூர் செய்திகள்

கலசலிங்கம் பல்கலைக்கு ரூ.27 லட்சம் மானியம்

மதுரை: ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம் பல்கலைக்குஆராய்ச்சி கூட்டாண்மை திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மானியம் அளிப்பதற்கு தமிழக அரசின் டிட்கோ ஒப்புதல் வழங்கியது. இதற்கான அரசாணையை மதுரையில் நடந்ததமிழக எழுச்சி முதலீட்டு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.பல்கலை டி.பி.ஐ., தலைவர் டேனி திட்ட தலைமை ஆராய்ச்சியாளராகவும்,உதவியாக கோவை அப்ரோக்ஸ்டெக் கம்பெனி ஆராய்ச்சியாளர்கள் ஸ்ரீவீரமுத்துராஜ், ராஜபிரியன், திக்விஜயன், தீபிகா இருப்பர். சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இதயம் சம்பந்தமான கருவிகள் உற்பத்தியில் தொழிற்சாலைகளுடன் இணைந்து ஆராய்ச்சி திட்டம் மேற்கொள்வதற்காகவும் இந்த மானியம் வழங்கப்படுகிறது.தமிழக அரசின் நிதி பெற்றதற்கு வேந்தர் ஸ்ரீதரன், இணைவேந்தர் அறிவழகி, துணைவேந்தர் நாராயணன், துணைத் தலைவர் சசிஆனந்த், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்