சுருக்கெழுத்து தேர்வில் 276 பேர் பங்கேற்பு
தேனி: தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில் பிப்., ஆக.,ல் இளநிலை, முதுநிலை தமிழ், ஆங்கிலம், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. தேனி மாவட்டம் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று முன்தினம் தமிழ் சுருக்கெழுத்து தேர்வு நடந்தது. பங்கேற்க 119 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 3 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வில் 116 பேர் பங்கேற்றனர். நேற்று நடந்த ஆங்கில சுருக்கெழுத்த தேர்வில் 160 பேர் பங்கேற்றனர். இக்கல்லுாரியில் ஆக., 26, 27ல் தட்டச்சு தேர்வு நடக்கிறது.