உள்ளூர் செய்திகள்

டில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடில்லி: தலைநகர் டில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.டில்லியின் சாணக்யாபுரியில் உள்ள சான்ஸ்கிரிதி பள்ளி, கிழக்கு டில்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள மதர் மேரி பள்ளி மற்றும் துவாரகா பகுதியில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளிக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து, வெடிகுண்டை தேடி வருகின்றனர். இதுவரை சந்தேகப்படும்படியாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பள்ளியில் இருந்த மாணவர்கள், உடனடியாக அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்