உள்ளூர் செய்திகள்

நம்மாழ்வார் விருது 3 விவசாயிகள் தேர்வு

சென்னை: தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற, மூன்று விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நடப்பாண்டில், தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்பு சாவடியை சேர்ந்த சித்தர்; திருப்பூர் மாவட்டம், பொங்கலுாரை சேர்ந்த பழனிசாமி; காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தை சேர்ந்த எழிலன் ஆகியோருக்கு முறையே, முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.மூவருக்கும் நம்மாழ்வார் விருது சான்றிதழ், முதல் பரிசாக 2.50 லட்சம்; இரண்டாம் பரிசாக 1.50 லட்சம்; மூன்றாம் பரிசாக 1 லட்சம் ரூபாய் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்