சி.ஓ.ஏ., தேர்வு பிப்.3ல் துவக்கம்
போடி: தமிழக அளவில் அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமெஷன் (சி.ஓ.ஏ.,) தேர்வு வரும் 2024 பிப்., 3 ல் துவங்குகிறது என அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழக அளவில் அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், சுருக்கெழுத்தர், கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமெஷன் தேர்வுகள் நடைபெறும். அரசு துறையில் தட்டச்சர் பதவிக்கு தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சி.ஓ.ஏ., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சி.ஓ.ஏ., தேர்வு எழுதுவதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சர் தேர்வில் ஆங்கிலம் அல்லது தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்நிலையில் வரும் 2024 பிப்., மாதம் துவங்க உள்ள சி.ஓ.ஏ., தேர்வு எழுதுபவர்கள் வரும் டிச., 6 ம் தேதி முதல் www.tndtegteonline.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். டிச., 31 விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். இதற்கான தேர்வு பிப்., 3, 4 ல் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் மார்ச் 22 ல் வெளியாகும். என அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.