சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு 308 மாணவர்கள் பங்கேற்பு
உடுமலை: உடுமலையில், 308 மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் பாடமாக தமிழ்மொழித்தேர்வு நடந்தது. தேர்வுகள் மார்ச் 13ம் தேதி வரை நடக்கிறது.உடுமலையில் பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்பட்டன. அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 178 மாணவர்கள், கணபதிபாளையம் சீனிவாசா பப்ளிக் பள்ளியில், 130 பேர் வீதம் மொத்தமாக, 308 மாணவர்கள் நேற்று தேர்வு எழுதினர்.