உள்ளூர் செய்திகள்

சம்பளத்தில் 4 ஆண்டாக மோசடி; பள்ளி நிர்வாகம் மீது பெண் புகார்

ஓட்டப்பிடாரம்: துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, சில்லாங்குளம் கிராமத்தில், முத்துக்கருப்பன் நினைவு அறக்கட்டளை சார்பில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது.அப்பள்ளியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில், மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதிகள் செயல்படுகின்றன.அங்கு, விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிறியபுஷ்பம் துப்புரவு பணியாளராகவும், அவரது மகள் கனிப்பிரியா சமையலராகவும் வேலை பார்த்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இருவரும் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இந்நிலையில், அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு தங்களுக்கு மாதம், 6000 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாகவும், வேலையை விட்டு நீக்கிய பிறகும், கடந்த, நான்கான்டுகளாக தங்களுக்கு அரசு வழங்கும் சம்பளத்தை பள்ளி நிர்வாகத்தினர் எடுத்துக் கொள்வதாகவும் சிறியபுஷ்பம் புகார் அளித்து உள்ளார்.இதுதொடர்பாக, தன் உறவினர் பால்ராஜ் என்பவருடன் கலெக்டர் அலுவலகத்தில் அவர் நேற்று புகார் மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்