நீட் உள்ஒதுக்கீட்டால் 405 பேர் மருத்துவத்தில் சேர்ந்துள்ளனர்: அமைச்சர் தகவல்
சிவகங்கை: &'நீட்&' தேர்வுக்காக தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் 405 பேர் மருத்துவத்தில் சேர்ந்துள்ளனர் என சிவகங்கையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பொங்கல் பரிசாக 2.17 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை இருந்தும் மக்கள் திட்டங்கள் செயல்படுத்துகிறோம். தமிழகத்தில் கொரோனா பலி அரை சதவீதத்தை தாண்டாமல் கட்டுப்படுத்தியதாக பிரதமர் மோடி பாராட்டினார். 52.17 லட்சம் மாணவர்களுக்கு &'லேப்டாப்&' வழங்கியுள்ளோம்.பள்ளிகளில் &'ரேங்க்&' சிஸ்டம் தடுத்துள்ளோம். வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு &'ஷூ மற்றும் சாக்ஸ்&' தரப்படும்.தமிழகத்தில் ரூ.519 கோடியில் ஹைடெக் லேப்&' திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். நீட், ஜே.இ.இ., மற்றும் சி.ஏ., பயிற்சி அளிக்க ரூ.16 கோடி ஒதுக்கியுள்ளோம். ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் தமிழகத்திற்கு 10 லட்சம் ஆடிட்டர் தேவை.இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவே ஆன்லைன் பயிற்சி தருகிறோம். கல்வியோடு சேர்ந்து மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களை நேசிப்போராகவும், தேசபக்தி கொண்டவராக வளர வேண்டும் என்பது நோக்கம். &'அட்டல் டிங்கரிங் (ஆய்வகம்) லேப்&', 742 பள்ளிகளில் பிப்.,க்குள் துவக்கப்படும். &'ஸ்மார்ட் வகுப்பு&' 7500 பள்ளிகளுக்கு வரும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப்பணியிடம் நிரப்பபடும். உபரியாக 7500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர், என்றார்.