உள்ளூர் செய்திகள்

உடனடி தேர்வில் 54,457 மாணவர்கள் தோல்வி

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்களுக்கு, சமீபத்தில் உடனடித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள், ஜூலை 25ம் தேதி  வெளியாயின. 95 ஆயிரத்து 635 மாணவர்கள் தேர்வெழுதியதில், 41 ஆயிரத்து 178 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 54 ஆயிரத்து 457 மாணவர்கள் மீண்டும் தோல்வியடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 43.05. இந்த மாணவர்கள், அடுத்ததாக அக்டோபரில் நடக்கும் தனித் தேர்வில் பங்கேற்கலாம். ஆனால், நடப்புக் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர முடியாது. பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், தனித் தேர்வுக்காக காத்திருந்து ஒரு கல்வியாண்டை வீணடிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் உடனடித் தேர்வுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும், 50 சதவீதம் அளவிற்கே தேர்ச்சி பெற்று வருகின்றனர். தேர்ச்சி விவரம்: பாட எண்ணிக்கை எழுதியோர் தேர்ச்சி பெற்றோர்  சதவீதம்ஒரு பாடம்            57,943        25,967                  44.81இரு பாடங்கள்       26,425          5,323                  20.14மூன்று பாடங்கள்   11,267          9,888                  87.76மொத்தம்               95,635        41,178                  43.05


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்