உள்ளூர் செய்திகள்

காலாண்டு விடுமுறை அக்.,6 வரை நீட்டிப்பு: ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்றது அரசு

சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களை நீட்டிக்க கோரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்து வகுப்பினருக்கும் தேர்வுகள் வரும் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது. செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்படும்; 5 நாட்களிலும் எவ்வித சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது.ஆசிரியர்கள் விடுமுறை நாட்கள் போதுமானதாக இல்லை, விடைத்தாள் திருத்தம், மதிப்பீடு, அலுவலக வேலைகள் என உள்ளதால் விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில், இன்று(செப்.,25), தமிழகத்தில் காலாண்டு தேர்வு லீவு அக்டோபர் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது பள்ளி திறப்பு 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்