உள்ளூர் செய்திகள்

நிப்ட் அட்மிஷன்: பிப்.8ம் தேதி நுழைவுத் தேர்வு அறிவிப்பு!

மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் இயங்கும் நிப்ட கல்வி நிறுவனத்தில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 31ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 7ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். பெங்களூரு, போபால், சென்னை, காந்திநகர், ஐதராபாத், கண்ணணூர், கோல்கட்டா, மும்பை, புதுடில்லி, பாட்னா, ரேபரேலி, ஷில்லாங் ஆகிய இடங்களில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி (நிப்ட்) மையங்கள் உள்ளன. அக்சசரி டிசைன், பேஷன் கம்யூனிகேஷன், பேஷன் டிசைன், நிட்வேர் டிசைன், லெதர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெஸ்., படிப்புகளும் அப்பேரல் புரடக்ஷனில் பி.எப்.டெக்., படிப்பும் இங்கு உள்ளன. எம்.டெஸ்., (டிசைன்), எம்.எப்.எம்., (பேஷன் மேனேஜ்மெண்ட்), எம்.எப்.டெக்., (பேஷன் டெக்னாலஜி) ஆகிய முதுநிலைப் படிப்புகளும் நிப்ட் மையங்களில் கற்றுத்தரப்படுகின்றன. செமஸ்டர் கட்டணம் ரூ.51,170. என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கான கட்டணம் ரூ.3.6 லட்சம். நிப்ட் கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் மொத்தம் 1180 இடங்கள் உள்ளன. நிப்ட் மையங்களில் அட்மிஷன், தகுதி மற்றும் இதர விவரங்களுக்கு: www.nift.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்