உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை

திருப்பூர்: முதல் பருவத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததால், அக்., 4 வரை, அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், கடந்த இரு வாரங்களாக, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும்; ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும் நடைபெற்றது. தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று முதல், அக்., 4 வரை, ஒன்பது நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; அக்., 5ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப் படும். என்றாலும், விடுமுறை நாட்களில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்