உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெங்களூரு தமிழ் சங்க காமராஜர் பள்ளி சாதனை

பெங்களூரு: பெங்களூரு தமிழ் சங்க காமராஜர் உயர்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 91 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பெங்களூரு தமிழ் சங்க காமராஜர் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு குஷால்நகர் கே.பி.சந்திரா பகுதியில் அமைந்துள்ளது. 1984ல் நிறுவப்பட்ட இப்பள்ளி, இருபாலரும் படிக்கும் பள்ளியாகும். மாநில கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 8 முதல் 10ம் வகுப்பு வரை தமிழை முதன்மை பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது.இங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி கட்டணம், சீருடை, பாடப்புத்தகங்கள், எழுதுகோல், பாதணிகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் ஏழை எளிய மாணவர்களே படித்து வருகின்றனர்.இம்முறை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, 27 பேர் எழுதினர். அதில், 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 91 சதவீத தேர்ச்சியாகும்.மாணவி சவுந்தர்யா, 461 மதிப்பெண் பெற்று முதலிடம்; மாணவர் குணசேகரன், 458 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம்; சுலைமான் சாதிக் 419 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம்; மாணவி வின்சியா 417 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும்; மாணவி நெலுப்பர், 403 மதிப்பெண் பெற்று ஐந்தாவது இடமும் பிடித்துள்ளனர்.மாணவர்கள் தமிழ் பாடத்தில் 100 சதவீதம், கன்னடத்தில் 96 சதவீதம், ஆங்கிலத்தில் 91 சதவீதம், கணக்கில் 100 சதவீதம், அறிவியலில் 100 சதவீதம், சமூக அறிவியலில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை, சங்கத்தின் தலைவர் கோ.தாமோதரன், செயலர், மு.சம்பத், தாளாளர் எஸ்.ராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்