பொறியியல் படிப்பில் 95,614 மாணவர்கள் சேர்ந்தனர்
அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் இதுவரை 95,614 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற்ற கலந்தாய்விற்கு 5372 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 3446 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்விற்கு வந்திருந்தனர். 1911 பேர் வரவில்லை. 15 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றும் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர். இதுவரை வராதவர்களின் எண்ணிக்கை 30,897 (24.37 ) உள்ளது. அதேப்போல, பாடப்பிரிவை தேர்வு செய்யாமல் சென்றவர்களின் எண்ணிக்கை 283 ஆக உள்ளது. கடந்த ஜுலை மாதம் 8ம் தேதி துவங்கி ஒரு நாளும் இடைவெளி விடாமல் நடந்து வரும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில், ஆகஸ்ட் 8ம் தேதி வரை 95,615 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த கல்வியாண்டில், சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான பொறியியல் சேர்க்கை இடங்கள் காலியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வில் மூன்று சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர் கூட சேர்க்கை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.