உள்ளூர் செய்திகள்

வாசிப்புத் திருவிழா!

சிவகாசி: சிவகாசி அரசன் கணேசன் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், அஞ்சிறைத் தும்பி இலக்கிய வட்டம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் நாளை (டிச.,25) மாலை 3 மணிக்கு வாசிப்புத் திருவிழா நடைபெறுகிறது. இதில் கட்டுரைப் போட்டி, பேச்சு போட்டிக்கு மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் வரவேற்கப்படுகின்றனர். கட்டுரைப்போட்டியில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலானவர்கள், எனக்கு பிடித்த இடம் என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு மிகாமல் எழுதலாம். ஒரு பள்ளிக்கு 3 பேர் மட்டும் அனுமதி. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலானவர்கள் எனக்கு பிடித்த எழுத்தாளர், கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர் என்ற தலைப்பு களில் 2 பக்கத்திற்கு மிகாமல் எழுத வேண்டும். கல்லூரி மாணவர்கள் 3 பக்கத்திற்கு மிகாமல் எழுத வேண்டும். ஒரு பள்ளி, கல்லூரிகளில் இருந்து 3 பேர் மட்டும் அனுமதி. பொதுமக்களும் பங்கேற்கலாம். இவர்கள் 3 பக்கத்திற்கு மிகாமல் எழுத வேண்டும். கட்டுரைப்போட்டியில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலானவர்கள், எனக்குப் பிடித்தமானவர் தலைப்பிலும், 6ம் வகுப்புமுதல் பிளஸ் 2வரை, கல்லூரி மாணவர்கள், எனக்கு பிடித்த புத்தகம் கவிதை, சிறுகதை, நாவல் தலைப்பில் 10 நிமிடத்திற்கு மிகாமல் எழுதலாம், பொது மக்களும் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 98435 77110, 94435 70213 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்