விண்ணப்பிக்க அவகாசம்
மதுரை: மதுரை முதன்மை கல்வி இயக்குனர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் மார்ச் 2016 பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத தனித்தேர்வர்கள், அரசு சேவை மையங்களில், நவ.,27க்குள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. தொடர் மழையால், கடைசி தேதியை டிச.,4 வரை நீட்டித்திருந்த நிலையில், டிச.,11 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.