மாணவர்கள் போராட்டம்
காரைக்கால்; நேரடி தேர்வை ரத்து செய்யக்கோரி அண்ணா கல்லுாரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.காலைக்கால் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் விருப்பப்படி நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தேர்வுகள் நடத்தலாம் என புதுவை பல்கலைக்கழகம் அறிவித்தது. அதையடுத்து கல்லுாரிகளில் ஆன்லைனில் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அண்ணா கல்லுாரியில் திடீரென நேரடி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், நேரடி தேர்வை ரத்து செய்ய கோரி, மாணவர்கள் கல்லுாரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.