உள்ளூர் செய்திகள்

துணைவேந்தர் நியமனம்

புதுடில்லி: தமிழகத்தின் திருவாரூர் உட்பட நாடு முழுதும் 12 மத்திய பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.மத்திய கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஹரியானா, ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு, ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 12 மத்திய பல்கலைக்கு துணைவேந்தர்களை நியமிக்க, ஜனாதி பதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.இதன்படி தமிழகத்தின் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலை துணைவேந்தராக, பேராசிரியர் முத்துகலிங்கன் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக பதவி வகித்து வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்