உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பட்டிமன்றம்

சென்னை, திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில், ராஜா தலைமையில் இந்த பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சியில் காவல் துறை சார்பில் தலைமையிடத்து கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர்கள் ரம்யா பாரதி, திஷா மிட்டல் மற்றும் திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர்கள் தேஷ்முக் சஞ்சய் சேகர், கோபி மற்றும் உதவி கமிஷனர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பொதுமக்களை விட காவல் துறை, ஆசிரியர்கள் என பொறுப்பில் இருப்பவர்களுக்கே அதிகம் பொறுப்பு உள்ளது என பட்டிமன்ற நடுவர் ராஜா தீர்ப்பு வழங்கினார். திரைப்பட நடிகர் கானா பாலாவின், போதை விழிப்புணர்வு பாடல் ஆடியோ வெளியிடப்பட்டது. பின் லோயோலா கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்