உள்ளூர் செய்திகள்

பாடநுால் வெளியீடு

புதுச்சேரி: மருந்தியல் பட்டய படிப்பு மாணவர்களுக்கான மருந்தக மூலகத்துறை செய்முறை விளக்க பாடநுாலை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.புதுச்சேரி அன்னை தெரேசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் பதிவாளர் கோபால், திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருந்தியல் கல்லுாரி பேராசிரியர் வில்லியம் அற்புத சுந்தர் ஆகியோர் இணைந்து மருந்தியல் பட்டைய படிப்பு மாணவர்களுக்கான மருந்தக மூலகத்துறை செய்முறை விளக்க பாட நுால் எழுதியுள்ளனர். இதன் வெளியீட்டு விழா நடந்தது. முதல்வர் ரங்கசாமி நுாலை வெளியிட்டார். அன்னை தெரேசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி புல முதன்மையர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார். நுால் ஆசிரியர்கள் கோபால், வில்லியம் அற்புத சுந்தர், எவரெஸ்ட் பதிப்பக நிறுவனர் ஜோதி தீபக் பிவ்பாதகி, நிர்வாக இயக்குனர் ப்ரஜெக்தா பிவ்பாதகி மற்றும் இயக்குனர் அக்ஷய் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நுாலை பூனாவை சேர்ந்த எவரெஸ்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருந்தியல் பட்டய படிப்பு மாணவர்களுக்கு இந்த நுால் பயனுள்ளதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்