நெக்ஸ்ட்டுக்கு எதிர்ப்பு
மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டம் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில், உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது. அப்போது, நெக்ஸ்ட் தேர்வு முறையை அமல்படுத்தக்கூடாது; நீட் தேர்வு விலக்கு; கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை திறப்பு; மருத்துவ இடங்களுக்கு பொது கவுன்சிலிங் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.